< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
8 Jun 2023 2:16 PM IST

கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

தொடர் மின்வெட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின்வாரியத்திற்குட்பட்ட நந்திவரம், பெருமாட்டுநல்லூர் வரதராஜ நகர், கன்னிவாக்கம் சாந்தா தேவி நகர், தர்காஸ் நகர், காயரம்பேடு, பாண்டூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கு, ஒருமுறை தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி அவதிப்பட்டனர். மின்வெட்டு பிரச்சினை குறித்து மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் யாரும் செல்போன் அழைப்பை எடுப்பதில்லை பொதுமக்கள் நேரில் சென்று கேட்டாலும் அதிகாரிகள் முறையான பதில் சொல்வதில்லை. மேலும் பகல் நேரத்தில் பல்வேறு பகுதியில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்படுகிறது.

பராமரிப்பு பணிகளை செய்வதில்லை

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை செய்வதற்காகவே ஒரு நாள் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சரியான முறையில் பராமரிப்பு பணிகளை செய்வதில்லை.இதன் காரணமாகவே மின்வெட்டு பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுகிறது. அன்றைய தினத்தில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது, மின் இணைப்பு கொடுப்பது அது போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றனர். எனவே பராமரிப்பு நாளில் பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்