< Back
மாநில செய்திகள்
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு
கரூர்
மாநில செய்திகள்

குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு

தினத்தந்தி
|
15 Jun 2023 12:09 AM IST

குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு நடந்தது.

குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட குளித்தலை, தோகைமலை, நங்கவரம் ஆகிய குறுவட்டத்தை சேர்ந்த கிராமங்களுக்கு வருவாய் நிர்வாக தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த வாரம் தொடங்கியது. குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா தலைமை தாங்கி தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இந்த நிலையில் இந்த ஜமாபந்தி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாலை குடிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு கிராமப் பகுதியில் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 485 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அதில் 223 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மனுதாரர்களுக்கு தீர்வு காண ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா மனுதாரர்களுக்கு தீர்வு காண ஆணையை வழங்கினார். இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு வட்டாட்சியர் முருகன், குளித்தலை வட்டாட்சியர் மகுடீஸ்வரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்