விருதுநகர்
வத்திராயிருப்பு ஒன்றியக்குழு கூட்டம்
|வத்திராயிருப்பு ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரேகா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் 28 தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தினர். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன் கூறியதாவது:- கவுன்சிலரின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மேலும் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லலிதா, சிவக்குமார், பொறியாளர்கள் தீபக், ஜெயா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் நல அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.