< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
|1 Nov 2023 12:39 PM IST
முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் ஆய்வு தரவுகள் தொடர்பாகவும், வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது முன்வைக்க வேண்டிய வாதங்கள் தொடர்பாகவும் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.