< Back
மாநில செய்திகள்
வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
தென்காசி
மாநில செய்திகள்

வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு

தினத்தந்தி
|
13 Jun 2023 12:15 AM IST

கடையம் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கடையம்:

கடையம் வட்டாரம் வெங்கடாம்பட்டி கிராமத்தில் 2021-22 ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றினை வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் பார்வையிட்டு மரக்கன்றுகள் நடவு செய்வது தொடர்பான ஆலோசனை வழங்கினார். 2023-24 ம் ஆண்டில் கலைஞர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களான தெற்கு மடத்தூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடி தரிசு நில தொகுப்பு அமைக்க சாத்திய கூறு உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து ரவணசமுத்திரம் கிராமத்தில் 2022-23ம் ஆண்டில் தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மரகன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். மேலும் தெற்கு கடையம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரடி நெல் விதைப்பு பயிர்களின் நிலையை ஆய்வு செய்து தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பால்துரை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் இசக்கியம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்