நாமக்கல்
சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
|நாமக்கல்லில் சாலை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தனர்.
நாமக்கல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலை பணிகளை சேலம் தரக்கட்டுபாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் முதல் பைபாஸ்சாலை சந்திக்கும் பகுதி வரை சுமார் 2.50 கி.மீட்டர் சாலை மேம்பாடு செய்யப்பட்டு, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் சாலையின் நீளம், அகலம், தடிமன், அடர்த்தி, சரிவு மட்டம் மற்றும் தரத்தினை ஆய்வு செய்து, மழைநீர் தேங்காத வண்ணம் சாலைகள் அமைக்க அறிவுரை கூறினார். மேலும் சாலையோரம் மரக்கன்றுகள் நடவும் வலியுறுத்தினார்.
இதேபோல் நாமக்கல் - திண்டமங்கலம் - கீரம்பூர் சாலை, தளிகை யூனியன் சாலை பணியையும் கோட்ட பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நாமக்கல் உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார், தரக்கட்டுபாடு உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி மற்றும் உதவி பொறியாளர் (தரக்கட்டுபாடு) பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.