< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
|17 July 2022 10:33 PM IST
கிருஷ்ணகிரியில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு தலைமையில், சிறப்பு பறக்கும் படையினர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 1.855 டன் விதைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை வைத்திருந்தது தெரிந்தது. இந்த விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து விதிகளை மீறிய விதை விற்பனை நிலையங்கள் மீது மேல் நடவடிக்கை தொடரப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது, விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி விதை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.