< Back
மாநில செய்திகள்
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - வேல்முருகன்
மாநில செய்திகள்

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் - வேல்முருகன்

தினத்தந்தி
|
19 Sept 2022 6:09 PM IST

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி, தமிழ்நாடு, புதுச்சேரி தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு மாபியா கும்பல்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

கடத்தப்பட்ட தமிழர்கள், மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி என்கிற எல்லைப் பகுதியில் சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தாய்லாந்து எல்லை மூலம் ஆள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசும், இந்திய அரசும், துரிதமாக செயல்பட்டு மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய இளைஞர்களை பாதுகாப்புடன் மீட்பதோடு, இச்சம்பவத்துக்கு காரணமான புரோக்கர்களையும், ஏஜெண்டுகளையும், கடத்தல் கும்பலையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்