< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
புழல் ஏரியில் என்ஜினீயர் பிணமாக மீட்பு
|13 Aug 2023 5:05 PM IST
புழல் ஏரியில் என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார்.
அம்பத்தூர் சிவப்பிரகாசம் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சரியான வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற வெங்கடேசன் அதன்பிறகு மாயமானார்.
இந்தநிலையில் அம்பத்தூர் முருகாம்பேடு அருகே உள்ள புழல் ஏரியில் வெங்கடேசன் பிணமாக மிதந்தார். அம்பத்தூர் போலீசார், ஏரியில் மிதந்த வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை கிடைக்காத விரக்தியில் வெங்டேசன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.