< Back
மாநில செய்திகள்
தியாகதுருகத்தில்கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தியாகதுருகத்தில்கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

தினத்தந்தி
|
31 July 2023 12:15 AM IST

தியாகதுருகத்தில் கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்கப்பட்டாா்.


தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே பாப்பான்குளம் தெருவை சேர்ந்தவர் ஜீனத் பி (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக சென்ற போது, அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதில் தண்ணீரி நீந்தியடி, வெளிய வர முடியாமல் சுத்தமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மூதாட்டியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்