< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
களியக்காவிளை அருகேகிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு
|16 July 2023 3:47 AM IST
களியக்காவிளை அருகேகிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்கப்பட்டார்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே உள்ள குளப்புரம் பால்குளத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக நேற்றுமுன்தினம் மாலையில் குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனே நிலைய அலுவலர் சந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு மூலம் இறங்கி அந்த பெண்ணை மீட்டனர்.
விசாரணையில் அவர் அடைக்காக்குழியை அடுத்த மஞ்சாகுழி பகுதியை சேர்ந்த வினு மனைவி விசிலா (வயது 39) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் விசாரணை நடந்தது.
----