< Back
மாநில செய்திகள்
கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

தினத்தந்தி
|
15 July 2022 11:12 PM IST

தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை(வயது 62). விவசாயியான இவருக்கு சொந்தமான அதே பகுதி முனியப்பர்கோவில் அருகே உள்ள கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் சென்றனர். அப்போது மின்வாரிய அதிகாரி ஒருவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றின் சுற்று சுவரில் முட்டையிட்டு அடை காத்த மயில் ஒன்று திடீரென பறந்தபோது தவறி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் கார்த்திகேயன், அருணாச்சலம், சந்தோஷ்குமார், ஜெகன், சங்கர் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த பெண் மயிலை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் காட்டில் விட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகள்