< Back
மாநில செய்திகள்
கருங்கல் அருகே மாயமான வாலிபர் ஓடையில் பிணமாக மீட்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கருங்கல் அருகே மாயமான வாலிபர் ஓடையில் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
7 March 2023 12:02 AM IST

கருங்கல் அருகே மாயமான வாலிபர் ஓடையில் பிணமாக மீட்கப்பட்டார்.

கருங்கல்:

கருங்கல் அருகே திக்கணங்கோடு மூவர்புரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் மணிகண்டன் (வயது 29). நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

பின்னர் மாங்கோடு வண்ணான்விளை பகுதியில் உள்ள ஓடையில் அவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

---

மேலும் செய்திகள்