< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பேரம்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த மாடு மீட்பு
|12 Oct 2023 7:39 PM IST
பேரம்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த மாடு மீட்கப்பட்டது.
பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பின்புறம் உள்ள மதில்சுவர் அருகே மழைநீர் வடிகால்வாய் செல்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக மேய்ச்சலுக்கு வந்த பசு மாடு ஒன்று மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து மேலே வர முடியாமல் வெகு நேரமாக தவித்துக் கொண்டிருந்தது. மாடு தொடர்ந்து கத்தியவாறு இருந்தது. இதை கண்ட 8-வது வார்டு கவுன்சிலர் சுதாகா் இது குறித்து பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மழைநீர் வடிகால் வாயில் தவறி விழுந்த பசு மாட்டின் உடலில் கயிற்றை கட்டி அதனை லாபமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.