< Back
மாநில செய்திகள்

புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

22 Oct 2022 12:22 AM IST
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பசுமாட்டை கயிறு மூலம் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.