< Back
தமிழக செய்திகள்

அரியலூர்
தமிழக செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

15 Oct 2022 11:48 PM IST
ஆண்டிமடம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த கூத்தப்பன் என்பவரது சினை பசுமாடு அப்பகுதி வயல்வெளியில் மேச்சலுக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து பசு மாட்டை மீட்க முயன்றனர். ஆனால் பசுமாட்டை மீட்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பசுமாட்டை கயிறு மூலம் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.