தமிழக செய்திகள்

தேனி
தமிழக செய்திகள்
கிணற்றில் விழுந்த பசு மீட்பு

22 May 2022 10:48 PM IST
போடி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
போடி:
போடி அருகே உள்ள டொம்புசேரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவரது பசு மாடு நேற்று மதியம் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாடு, அங்கிருந்த 60 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதனை பார்த்த கருப்பையா உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை மீட்டனர்.