< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சாக்கடை கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்பு
|1 Jun 2022 12:28 AM IST
சாக்கடை கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேலாயுத நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று, திடீரென தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தது. இதையடுத்து அந்த மாடு எழ முடியாமலும், மேலே ஏற வழியின்றியும் தவித்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பசுமாட்டை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள், பசுமாட்டை கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.