< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த காளை மீட்பு
|3 Oct 2023 12:30 AM IST
கிணற்றில் தவறி விழுந்த காளை மீட்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டி கிராமத்தில் நேற்று சேவகபெருமாள் அய்யனார் கோவில் காளை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த 50 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராதவிதமாக அந்த காளை தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் காளை காயம் இன்றி தப்பியது.
இதுகுறித்து அறிந்த சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் காளையை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.