< Back
மாநில செய்திகள்
பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்பு
மாநில செய்திகள்

பிறந்து சில மணி நேரமான ஆண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்பு

தினத்தந்தி
|
27 May 2024 12:35 AM IST

குழந்தையை முட்புதர் பகுதியில் வீசிச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் கோட்டை பகுதியில் தேவதானம் ரெயில்வே கேட் அருகில் உள்ள முட்புதர் முன்பு நேற்று மதியம் 1 மணி அளவில் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு (வயது 28) மற்றும் வளர்மதி (38) ஆகியோர் குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுக்க சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இ.பி. ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இது பற்றி ரோந்து பணியில் இருந்த போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் உத்தரவின்பேரில் சைல்டு லைன் (1098) மேற்பார்வையாளர் பிரியா, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் புகழேந்தி, கோபு உள்ளிட்ட பணியாளர்களிடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை முட்புதர் பகுதியில் வீசிச்சென்றது யார்? என்பது குறித்து கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்