< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு
|19 July 2022 12:40 PM IST
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
ராமேஸ்வரம்:
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 100-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த 2 குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.
மணல் திட்டில் தவித்த 7அகதிகளையும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ஏற்றி வந்து ராமேஸ்வரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கடலோர போலீசார் 7அகதிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.