< Back
மாநில செய்திகள்
கோவை நூற்பாலையில் கொத்தடிமைகளாக இருந்த 6 பெண்கள் மீட்பு
மாநில செய்திகள்

கோவை நூற்பாலையில் கொத்தடிமைகளாக இருந்த 6 பெண்கள் மீட்பு

தினத்தந்தி
|
14 July 2022 4:37 AM IST

ஜார்கண்டை சேர்ந்த 6 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கோவை,

தமிழகத்தின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நூற்பாலை ஒன்றில் ஜார்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தை சேர்ந்த 6 பெண்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு ஊதியம் வழங்காமலும், சொந்த ஊருக்கு அனுப்பாமலும் ஆலை நிர்வாகம் அவர்களை கொத்தடிமைகளைப்போல வேலை வாங்கியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அந்த பெண்கள் தங்களை மீட்குமாறு ஜார்கண்ட் அரசிடம் உதவி கேட்டனர். இதையடுத்து மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறைத்துறை அதிகாரிகள் தலையிட்டு அந்த பெண்களை மீட்டு பாதுகாப்பாக ஜார்கண்ட் அழைத்து சென்றனர். இந்த தகவலை ஜார்கண்ட் அரசு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்