< Back
மாநில செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காணாமல் போன 17 குழந்தைகள் மீட்பு - போலீசார் நடவடிக்கை
சென்னை
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது காணாமல் போன 17 குழந்தைகள் மீட்பு - போலீசார் நடவடிக்கை

தினத்தந்தி
|
3 Jan 2023 11:39 AM IST

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காணாமல் போன 17 குழந்தைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் மெரினா கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அங்கு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட போலீசார் அனுமதித்தனர். இதனால் காமராஜர் சாலையில் பொதுமக்கள் பெருமளவில் கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிகமாக 2 போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

மக்கள் கூட்டத்தில் 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் காணாமல் போய் விட்டனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்து, 17 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதுபோல 3 முதியவர்களும் மீட்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்