கன்னியாகுமரி
தக்கலை அருகேமாயமான முதியவர் குளத்தில் பிணமாக மீட்பு
|தக்கலை அருகேமாயமான முதியவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள கூவரவுவிளையை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது71) தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முதல் தேவதாசை காணவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரின் தக்கலை போலீசார், மாயமான தேவதாசை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இவரது வீட்டில் இருந்து ½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொற்றிக்குளத்தில் ஒரு பிணம் மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. உடனே குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது அது மாயமான தேவதாசின் பிணம் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த பிணத்தை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---