தென்காசி
கலைஞர் நூற்றாண்டு விழா திருமண மண்டபம் அமைக்க கோரிக்கை
|சாம்பவர் வடகரையில் கலைஞர் நூற்றாண்டு விழா திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என அமைச்சரிடம், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கோரிக்கை மனு கொடுத்தார்.
சுரண்டை:
சாம்பவர்வடகரை நகரப்பஞ்சாயத்துக்கு திருமண மண்டபம், குடிநீர் வசதி மற்றும் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கி பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனிடம் சாம்பவர் வடகரை நகர செயலாளர் முத்து மற்றும் பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் சாம்பவர்வடகரை நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட 14-வது வார்டு இந்திரா காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழா திருமண மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் சாம்பவர்வடகரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட சுமார் 3 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் மேற்கொள்ள கோரிக்கை மனு வழங்கினார்.