< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
|12 Oct 2023 1:40 AM IST
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்காபுரம் ஊராட்சியை சேர்ந்த கீழ கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயநிலையில் உள்ளது. மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.