< Back
மாநில செய்திகள்
ராமேசுவரத்தில் இருந்து இணைப்பு ரெயில் இயக்க கோரிக்கை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரத்தில் இருந்து இணைப்பு ரெயில் இயக்க கோரிக்கை

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

வந்தே பாரத் ரெயிலுக்கு ராமேசுவரத்தில் இருந்து இணைப்பு ரெயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத்

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே மதுரை வழியாக வந்தே பாரத் விரைவு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்மாவட்ட மக்கள் குறைந்த நேரத்தில் சென்னை சென்று வருகின்றனர். இந்த ரெயில் சேவையை ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் அந்த ரெயில் மதுரைக்கு வரும் நேரம் மற்றும் செல்லும் நேரத்தில் இரு மார்க்கத்திலும் ராமேசுவரம்-மதுரை இடையே இணைப்பு ரெயில் விட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இணைப்பு ரெயில் இயக்கும் பட்சத்தில் அகில இந்திய அளவில் ராமேசுவரத்திற்கு வரும் பக்தர்கள் இந்த ரெயிலை பயன்படுத்தி கொள்வார்கள்.

கோரிக்கை மனு

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரி, தென்னக ரெயில்வே பொது மேலாளர், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்