தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை
|தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் தூத்துக்குடியில் நேற்று தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது துப்பாக்கி சூட்டில் காயமடைந்த தங்கம் என்பவர் கூறுகையில், "கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தில் விவரம் தெரியாமல் நான் கலந்து கொண்டேன். தற்போது இந்த ஆலை மூடப்பட்டு உள்ளதால் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை விற்கப்படுவதாக அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை அதன் உரிமையாளர் கைவிட வேண்டும். ஆலையை திறந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் மீனவ சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.