< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சுங்கச்சாவடியில் உள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள்
|13 Nov 2022 12:40 AM IST
சுங்கச்சாவடியில் உள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறைகள் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி அந்த கழிப்பறைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே சுங்கச்சாவடியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து 43-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.