< Back
மாநில செய்திகள்
பாலம் கட்டும் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

பாலம் கட்டும் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை

தினத்தந்தி
|
17 Oct 2023 1:29 AM IST

பாலம் கட்டும் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் இருந்து ராமுத்தேவன்பட்டி, மீனாட்சிபுரம், ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம் ஆகிய கிராமங்களின் வழியாக அரசு பஸ் ஆலங்குளம் வந்தது. இதில் பள்ளிக்கு வரும் மாணவர்களும், ஆலங்குளம், சிவகாசி பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் உபயோகமாக இருந்தது. ஆலங்குளத்திற்கும், ராமுத்தேவன்பட்டிக்கும் இடையில் உள்ள தரைமட்ட பாலம் பழுதடைந்துவிட்டது. இதனால் இந்த வழியாக வந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதையடுத்து அங்கு புதிய பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் நடைபெறவில்ைல. ஆதலால் இந்த பாலம் கட்டும் பணியை தீவிரப்படுத்தி விரைவில் கட்டி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்