< Back
மாநில செய்திகள்
மின்கம்பத்தை அகற்றிய பின்பு சீரமைப்பு பணியை மேற்கொள்ள கோரிக்கை
விருதுநகர்
மாநில செய்திகள்

மின்கம்பத்தை அகற்றிய பின்பு சீரமைப்பு பணியை மேற்கொள்ள கோரிக்கை

தினத்தந்தி
|
21 May 2023 2:09 AM IST

மின்கம்பத்தை அகற்றிய பின்பு சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


விருதுநகர் யூனியன் பாவாலி பஞ்சாயத்தில் 1-வது வார்டில் உள்ள கலைஞர் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சாலை சீரமைப்பு பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் மத்தியில் மின்கம்பம் இருக்கும் நிலையில் அதனை அகற்றி சாலை ஓரத்தில் வைக்காமல் அப்படியே சாலை சீரமைப்பு பணி மேற்கொள்வது ஏற்புடையதல்ல. மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரத்தில் வைத்த பின்பு சாலைசீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என வார்டு கவுன்சிலர் அந்தோணியம்மாள் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் செய்திகள்