< Back
மாநில செய்திகள்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யக்கோரி  சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
தேனி
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யக்கோரி சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

தினத்தந்தி
|
20 Jun 2022 10:49 PM IST

கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்யக்கோரி சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

தேவதானப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோடு தேவதானப்பட்டி சாலையில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.

தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தேங்காய் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்