< Back
மாநில செய்திகள்
கோரிக்கை அட்டை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கோரிக்கை அட்டை

தினத்தந்தி
|
22 Sept 2023 12:15 AM IST

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான கூடுதல் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையின் போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 13 பேர் நேற்று கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்