< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடியரசு தினவிழா - சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|26 Jan 2023 8:54 AM IST
குடியரசு தினவிழாவை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
சென்னை,
நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றார். குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காவல் பதக்கம், கோட்டை அமீர் விருது, வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பதக்கம் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.