< Back
மாநில செய்திகள்
செயலியில் பெண்ணின் புகைப்படம், பெயர் பதிவு; சைபர் கிரைம் போலீசில் புகார்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

செயலியில் பெண்ணின் புகைப்படம், பெயர் பதிவு; சைபர் கிரைம் போலீசில் புகார்

தினத்தந்தி
|
14 Jan 2023 2:10 AM IST

செயலியில் பெண்ணின் புகைப்படம், பெயர் பதிவு தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை வடவாளத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 30). இவர் புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், எனது கணவரை விவாகரத்து செய்து திண்டுக்கல் சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எனது செல்போன் எண்ணிற்கு ஒரு செயலியில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில் எனது பெயர், புகைப்படத்தை பதிவிட்டு விவாகரத்து மேட்ரிமோனி செயலி என இருந்தது. இதில் எனது புகைப்படம் மற்றும் பெயரை பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்