விழுப்புரம்
பள்ளி கட்டிடங்களில் பழுதுகளை நீக்க வேண்டும்
|ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களில் பழுதுகளை நீக்க வேண்டும் விழுப்புரம் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான மாநில நிதிக்கு மானிய தொகை ரூ.22 லட்சத்து 77 ஆயிரத்து 852 பெறப்பட்டுள்ளதை கூட்டத்தின் பார்வைக்கு வைப்பது. கடந்த செப்டம்பர் 2-ந் தேதி நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மான எண் 47, 48-ல் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மாற்றம் செய்யப்பட்டு அதற்குப்பதிலாக புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குவது, ஊராட்சி ஒன்றியபள்ளி கட்டிடம், கழிவறை கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் ஆகியற்றை பழுதுநீக்கம் செய்வது, மதிய உணவுதிட்ட சமையலறையை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வி கேசவன், வனிதாஅரிராமன், குப்பம் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைத்தலைவர் ஷீலாதேவிசேரன் நன்றி கூறினார்.