< Back
மாநில செய்திகள்
பெரியாறு பாசன கால்வாயில்  மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரை
மாநில செய்திகள்

பெரியாறு பாசன கால்வாயில் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Jun 2023 3:19 AM IST

ெபரியாறு பாசன கால்வாயில் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வாடிப்பட்டி,

பெரியாறு பாசன கால்வாயில் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சுபாஸ்விபின் குமார், தலைமை நில அளவையர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னை விவசாயம் சங்க தலைவர் சீத்தாராமன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் நீரேத்தான் ஆதி அய்யனார் கண்மாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். ரெங்க சமுத்திரம் ஊருணி முதல் துருத்தி ஓடை வரை அமைக்கப்படும் சாலை பணியில் தூர்ந்து போன வாய்க்கால்களை மீண்டும் கட்டிக் கொடுக்கவேண்டும். முத்துக்குலசேகரன்நகரில் கட்டப்படும் வடிகால் துருத்தி ஓடை சென்று சேராமல் மாற்று வழி செய்ய வேண்டும்.

மராமத்து பணி

இருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியாறு பாசன கால்வாயை சீரமைத்து மராமத்து பணி செய்ய வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு தென்னை நடவு பணிக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூய்மை பணியாளர், கூடுதல் மருந்தாளுனர் நியமிக்க வேண்டும். வாடிப்பட்டி அரசு பள்ளிகளில் இரவு காவலர், துப்புரவு பணியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் வலியுறுத்தினர். முடிவில் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்