< Back
மாநில செய்திகள்
குடகனாறு அணை ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

குடகனாறு அணை ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி

தினத்தந்தி
|
28 July 2022 6:34 PM IST

வேடசந்தூர் அருகே, குடகனாறு அணை ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேடசந்தூர் அருகே அழகாபுரியில், 15 ஷட்டர்களை கொண்ட 27 அடி உயரம் உடைய குடகனாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் விவசாய நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு, ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. கடந்த ஆண்டு ரூ.6 கோடி மதிப்பில், அணையில் உள்ள ஷட்டர்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை பெய்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் தண்ணீரை அணையில் முழுமையாக தேக்கி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைக்கருத்தில் கொண்டு ஷட்டர்கள் துரு பிடிக்காமல் இருப்பதற்கு, அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டது. தற்போது ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக 2 முறை பெயிண்ட் அடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட உள்ளது. இந்த பணியை பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் காஜாமைதீன், செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் நீதிபதி, உதவி பொறியாளர் முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்