< Back
மாநில செய்திகள்
பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்
நீலகிரி
மாநில செய்திகள்

பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:30 AM IST

அருவங்காடு -ஜெகதளா இடையே பழுதான சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது.


குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அருவங்காட்டிலிருந்து ஜெகதளா கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையானது குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் மற்றும் மினி பஸ்கள் செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. மேலும், வாகன விபத்து ஏற்படும் நிலை இருந்து வந்தது. அதனால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சாலையை சீரமைக்க 1 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சாலையை சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், செயற்பொறியாளர் வின்சென்ட் பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்