< Back
மாநில செய்திகள்
ரூ.41 லட்சத்தில் கோவில் குளம் சீரமைப்பு பணி
சிவகங்கை
மாநில செய்திகள்

ரூ.41 லட்சத்தில் கோவில் குளம் சீரமைப்பு பணி

தினத்தந்தி
|
21 March 2023 12:15 AM IST

ரூ.41 லட்சத்தில் கோவில் குளம் சீரமைப்பு பணி தொடங்கியது

காரைக்குடி,

காரைக்குடி செக்காலை சிவன் கோவில் குளம் அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் தெய்வானை இளமாறன் வேண்டுகோளின் பேரில் நகராட்சி சார்பில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குளத்தை சுற்றிலும் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைமேடை, குளத்தை பாது காக்கும் வகையில் சுற்றிலும் வேலி, அழகிய பூச்செடிகள், முதியோர் அமர்ந்து செல்ல இருக்கைகள், வண்ண விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் முத்துத்துரை பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், கவுன்சிலர் தெய்வானை இளமாறன், ராஜராஜேஸ்வரி கோவில் முன்னாள் அறங்காவலர் காரை சுரேஷ், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்