< Back
மாநில செய்திகள்
பேரம்பாக்கத்தில் கரடுமுரடான சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பேரம்பாக்கத்தில் கரடுமுரடான சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
20 Sept 2023 12:44 PM IST

பேரம்பாக்கத்தில் கரடு முரடான சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம்பாக்கம் பஜாரில் சாலை மிகவும் சேதமடைந்ததால் அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் சேதமடைந்த சாலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

ஆனால் சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இரண்டு மாதங்கள் ஆகியும் தார் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சாலையில் ஜல்லி கற்கள் மட்டுமே காணப்படுவதால் கரடுமுரடான சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. புதிய சாலை அமைக்கப்படாததால் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதியடைகின்றனர். சில நேரங்களில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.

எனவே பேரம்பாக்கம் பஜாரில் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை துறை சார்ந்த அதிகாரிகள் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்