< Back
மாநில செய்திகள்
உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது

தினத்தந்தி
|
23 July 2022 11:11 PM IST

திருக்கோவிலூர் பகுதியில் உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது பொதுமக்கள் புகார்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட முறை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்றே தெரியாத நிலை உள்ளது. மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் திடீரென உயர் மின்னழுத்தம் ஏற்படுவதால் மின்சாதன பொருட்கள், பழுதடைகின்றன. எனவே திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்வதோடு, உயர் மின் அழுத்தத்தையும் தவிர்க்க மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்