< Back
மாநில செய்திகள்
கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே சேதமடைந்த சாலை சீரமைப்பு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே சேதமடைந்த சாலை சீரமைப்பு

தினத்தந்தி
|
10 July 2022 6:15 PM GMT

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.

திட்டச்சேரி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.

இணைப்பு சாலை

திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொட்டாரக்குடியில் இருந்து நல்லுக்குடி வரை செல்லும் திருவாரூர் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.

இந்த சாலை வழியாக கொட்டாரக்குடி, நல்லுக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமாக காணப்பட்டது

இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைந்தனர். சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் வெளி வந்தது.

சீரமைப்பு

இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொட்டாரக்குடி, நல்லுக்குடி இடையே சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்