< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த சாலை சீரமைப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சேதமடைந்த சாலை சீரமைப்பு

தினத்தந்தி
|
14 April 2023 12:30 AM IST

பழனியில் கோர்ட்டு அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.

பழனி கோர்ட்டு அருகே உழவர்சந்தை சாலை சந்திப்பு பகுதியில் ரவுண்டானா உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுண்டானா பகுதியில் திண்டுக்கல் சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சீரமைப்பு பணி நேற்று நடைபெற்றது. அப்போது உழவர்சந்தை பிரிவு ரவுண்டானா மட்டுமின்றி, மயில் ரவுண்டானா பகுதியில் சேதமடைந்த சாலையும் சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்