< Back
மாநில செய்திகள்
கீழ்வேளூரில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சிமெண்டு சிலாப்புகள் சீரமைப்பு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கீழ்வேளூரில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சிமெண்டு சிலாப்புகள் சீரமைப்பு

தினத்தந்தி
|
30 May 2022 11:23 PM IST

தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கீழ்வேளூரில் மழைநீர் வடிகால் சிமெண்டு சிலாப்புகள் சீரமைக்கப்பட்டன.

சிக்கல்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கீழ்வேளூரில் மழைநீர் வடிகால் சிமெண்டு சிலாப்புகள் சீரமைக்கப்பட்டன.

சேதமடைந்த சிலாப்புகள்

கீழ்வேளூர் பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் கீழ்வேளூர் தேரடியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் வழியாக மழைநீர் வடிகால் செல்கிறது. இந்த மழைநீர் வடிகாலின் மேல்புறத்தில் சிமெண்டு சிலாப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்து சேதமடைந்து காணப்பட்டது.

இந்த பஸ்நிறுத்தத்தில் இருந்து செல்லும் பயணிகள், மாணவ மாணவிகள் உடைந்த சிமெண்டு சிலாப்புகளில் விழுந்து காயமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த மழை நீர் வடிகால் சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளி வந்தது.

சீரமைப்பு

இதன் எதிரொலியாக கீழ்வேளூர் பேரூராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடைந்த மழை நீர் வடிகால் சிமெண்டு சிலாப்புகளை சீரமைத்தனர்.

இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்