< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சேதமடைந்த அண்ணா சிலை சீரமைப்பு
|15 Sept 2023 1:14 AM IST
சேதமடைந்த அண்ணாசிலை சீரமைக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி-விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க. சார்பில் அதிவீரம்பட்டி தர்மர் என்பவர் அண்ணாவுக்கு சிலை நிறுவினார். அந்த சிலையை முன்னாள் சபாநாயகர் காளிமுத்து திறந்து வைத்தார். இந்தநிலையில் அண்ணா சிலையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதையடுத்து சிவகாசி மாநகர தி.மு.க. சார்பில் தற்போது அண்ணா சிலை பராமரிக்கப்பட்டது. சேதமடைந்த சிலையின் பகுதிகள் சரி செய்யப்பட்டது. இதனை மாநகர செயலாளர் உதயசூரியன் பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் சிலைக்கு வர்ணம் பூசப்பட்டது. தற்போது அண்ணா புதுப்பொழிவுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.