< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு
நீலகிரி
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு

தினத்தந்தி
|
5 Aug 2023 7:30 PM GMT

ஏலமன்னா பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏலமன்னா பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பந்தலூர்

ஏலமன்னா பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏலமன்னா பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி

பந்்தலூா் அருேக ஏலமன்னா, ெகாளப்பள்ளி, மழவன் ேசரம்பாடி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து ஏலமன்னா, மேங்கோரேஞ்ச் வழியாக பந்தலூருக்கு இணைப்பு சாலை செல்கிறது. இந்த வழியாக ஏலமன்னா ஆதிவாசி காலனி, உண்டு உறைவிட பள்ளிக்கு அரசு பஸ்கள், பிற வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் ஏலமன்னாவில் இருந்து மேங்கோரேஞ்ச் வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்து வந்ததால், அதில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

சாலை சீரமைப்பு

மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், ஆதிவாசி மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்லும் போது, தவறி விழுந்து காயமடைந்தனர். இதனால் சில நேரங்களில் காட்டு யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத நிலை இருந்தது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி, நெல்லியாளம் நகராட்சி மூலம் சாலையை சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து குண்டும், குழியுமாக இருந்த இடங்களில் 80 மீட்டர் தூரத்துக்கு இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. தற்போது சாலை சீரமைக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்