< Back
மாநில செய்திகள்
சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் நிருபர் பதவி - தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
மாநில செய்திகள்

சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் நிருபர் பதவி - தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

தினத்தந்தி
|
13 Dec 2022 8:32 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள நிருபர் பதவிக்கான ஹால் டிக்கெட்டுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுளளது.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 6 ஆங்கில நிருபர் பதவிகள் மற்றும் 3 தமிழ் நிருபர் பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 13-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை பெறப்பட்டன.

இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

அரசு நிருபர் பதவிக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் எனவும், இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ந்தேதி சென்னை தேர்வு மையத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்