< Back
மாநில செய்திகள்
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கடலூர்
மாநில செய்திகள்

ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தினத்தந்தி
|
29 Jun 2023 12:57 AM IST

திருவந்திபுரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருவந்திபுரம்,

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 25-ந்தேதி மகா கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. 26-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மூல மந்திர யாகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் மூல மந்திர யாகம் நடந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் விமான கலசத்தின் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பால விநாயகர், பாலமுருகன், துர்க்கை, சாஸ்தா, வீரன் சப்த மாதா மற்றும் பரிவார சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்