< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
போலீசாரின் அனுமதி பெற்று வீடுகளை வாடகைக்கு விட வேண்டும்: அதிகாரி தகவல்
|22 Oct 2023 11:18 PM IST
வேலாயுதம்பாளையம் பகுதியில் பாலீசாரின் அனுமதி பெற்று வீடுகளை வாடகைக்கு விட வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் சொந்த வீடுகளை வாடகைக்கு விடும்போது, குடிபெயரும் நபர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுக்கான நகலை வாங்கிக்கொள்ள வேண்டும், மேலும் ேபாலீசாரின் அனுமதி பெற்ற பிறகு தான் அவர்களை குடியமர்த்த வேண்டும், மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் பகுதியில் தங்கி இருந்து நோட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கலாம். மேற்கண்ட தகவலை அரவக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.